ரோஹித் ஷர்மாவை உருவகேலி செய்த காங்கிரஸ் பெண் நிர்வாகி - பதிலடி கொடுத்த பிசிசிஐ
ரோஹித் ஷர்மா குறித்த காங்கிரஸ் பெண் நிர்வாகியின் கருத்துக்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது.
ரோகித் சர்மா
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லாத இந்திய கிரிக்கெட் விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது.
ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது(shama mohammed), ரோகித் சர்மாவை உருவகேலி செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ பதிலடி
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்" என குறிப்பிட்டுள்ளார். அவரின் கருத்துக்கு ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா(devajit saikia)இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். ”முக்கியமான ஐசிசி போட்டியில் அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு பொறுப்பான நபர் இதுபோன்ற ஒரு அற்பமான கருத்தை வெளியிடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு தனிநபருக்கோ அல்லது அணிக்கோ மன உறுதியை குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடும்.
அனைத்து வீரர்களும் தங்கள் அதிகபட்ச திறனுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள், மேலும் முடிவுகள் தெளிவாகத் தெரியும். தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற இழிவான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து ஷமா முகமது தனது பதிவை நீக்கியுள்ளார்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
