இந்த லைப்ல பெரிய தொல்லையே , மனைவியும் கேர்ள் ஃப்ரெண்டுதான் - சர்ச்சையில் சிக்கிய கங்குலி

bcci souravganguly
By Irumporai Dec 22, 2021 01:25 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக  உள்ளார்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு குருகிராமில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்

அந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நிலவும் சூழல் மற்றும் அதில் இருக்கும் நெருக்கடியான சூழல் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சவுரவ் கங்குலி கூறிய பதில்கள் மிகவும் சர்ச்சையாகியுள்ளன.

அந்த நிலழ்ச்சியில் கங்குலி கூறியது இதுதான்  வாழ்க்கையில் எப்போதும் மன அழுத்தம் என்பதே இருக்காது. வாழ்வில் மனைவியும், கேர்ள் ஃப்ரெண்டும் நமக்கு மிகப்பெரிய மன அழுத்தம்” என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.

அவரின் இந்தக் கருத்தை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். அத்துடன் பலரும் இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நிலையில்  தற்போது மீண்டும்  ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.