பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலிக்கு , Z பிரிவு பாதுகாப்பு : காரணம் என்ன?

Sourav Ganguly
By Irumporai May 17, 2023 06:10 AM GMT
Report

பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை z பிரிவாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுரவ் கங்குலி 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ்கங்குலியின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு z பிரிவுக்கு உயர்த்தியுள்ளது. கங்குலிக்கு வழங்கப்பட்ட ஓய் பிரிவு பாதுகாப்பின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது z பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலிக்கு , Z பிரிவு பாதுகாப்பு : காரணம் என்ன? | Bcci President Gangulys Z Section Secured Increase

 அதிகரிக்கும் பாதுகாப்பு 

கங்குலியின் ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு மறு ஆய்வு செய்தது. இதில், கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் வகைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, முன்னாள் பிசிசிஐ தலைவருக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.