கொரோனா அச்சம்: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இந்த சமயத்தில் ஐபிஎல் போட்டிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்ற நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமா எனப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கேள்விகள் எழுந்துள்ளன. 

ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகி சொந்த நாடுகளுக்குச் சென்ற பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். 

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதியாகிவந்தது. நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு அணிகளின் வீரர்களுக்கும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதியாகிவந்தது. எனவே ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்