பாஜகவில் சேர்ந்தால்தான் பதவியா? கண்டுக்காத கங்குலி - காட்டத்தில் ரசிகர்கள்!
சவுரவ் கங்குலிக்கு தலைவர் பதவியில் வாய்ப்பு தரப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு தேர்வானார். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் தேர்வாகியிருந்தார்.
இவர்களது பதவிக்காலம் வரும் 19-ம் தேதியோடு முடிவடையும் நிலையில் பிசிசிஐயின் பொதுக்குழுக்கூட்டம் 18ம் தேதி கூட்டப்பட உள்ளது. இதில், 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிய ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை இரண்டாம் முறையாக தலைவராக்கிய நிலையில் கங்குலிக்கு மட்டும் ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து, பாஜகவில் சேராததன் காரணமாகதான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி மறுக்கப்பட்டது என்று மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரிணாமூல் காங்கிரசுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாலும்தான் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.