இந்திய வீரர்கள் புஜாரா, ரஹானேவுக்கு நேர்ந்த சோகம் - ரசிகர்கள் அதிர்ச்சி
2022 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம், அவர்கள் ஊதியத்தின் அடிப்படையில் கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதில் கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ+ பிரிவிலும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஏ பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.
அதேசமயம் கடந்தாண்டு ஏ பிரிவில் இருந்த இஷாந்த் சர்மா, ரஹானே, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த ஆண்டு பி பிரிவிலும், சி பிரிவில் இருந்த அக்ஸர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பி பிரிவிற்கு முன்னேறியுள்ளனர். ஆனால் கடந்தாண்டு ஏ பிரிவில் இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது சி பிரிவிலும், பி பிரிவில் இருந்த விருத்திமான் சி பிரிவிலும், இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இறங்கு முகமாக இருக்கும் ரஹானே, புஜாரா ஆகியோருக்கு இந்த சறுக்கல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.