சொந்த செலவில் ஆப்பு வைத்து கொண்ட இந்தியா : பி.சி.சி.ஐ. எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன?

rahane bcci pujara
By Irumporai Jan 15, 2022 04:23 AM GMT
Report

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும், அப்படி என்ற பாடல் வரிக்கு ஏற்றார் போல, இந்தியாவின் தோல்விக்கு காரணம் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்

ஆம், அந்த அளவுக்கு இந்திய அணியின் தூணாக விளங்க வேண்டிய ரஹானே, புஜாரா ஜோடி இந்த முறை ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.

மேலும், பந்துவீச்சில், கவனம் செலுத்திய இந்திய அணி தங்களது பலமான பேட்டிங்கில் கோட்டை விட்டது. சீனியர்களுக்கு அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பே தற்போது எமனாக மாறிவிட்டது.

முதல் டெஸ்டின் முடிவுக்கு பிறகு கோலி சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் இல்லை தோல்வி நிச்சயம் என்று கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

ஏன் பல்வேறு முன்னாள் வீரர்களும் புஜாரா, ரஹானேவை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் இந்திய அணி நிர்வாகமோ, பரவாயில்லை இன்னொரு வாய்ப்பு, இன்னொரு வாய்ப்பு என்று வழங்கி, மொத்தமாக தொடரை வெல்லும் இந்தியாவின் வாய்ப்புக்கு சொந்த செலவில் ஆப்பு வைத்து கொண்டது.

சொந்த செலவில் ஆப்பு வைத்து கொண்ட இந்தியா :  பி.சி.சி.ஐ. எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன? | Bcci Plans To Take Rahane And Pujara

ரஹானே, புஜாரா மீது செம கடுப்பில் இருக்கும் பி.சி.சி.ஐ. அவர்களிடம் பேட்டிங் குறித்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரஞ்சி கோப்பை மீண்டும் தொடங்கியதும், இருவரும் அதில் கண்டிப்பாக விளையாடி தங்களது ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஹானே, புஜாராவை அணியில் தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தது விராட் கோலியா? இல்லை பயிற்சியாளர் டிராவிடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே, புஜாரா, ரஹானே ஆகியோர் இந்தியாவுக்காக கடைசி டெஸ்டில் விளையாடியதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.