கிரிக்கெட்டுக்குள் அரசியலை கொண்டுவரும் BCCI.. இது விளையாட்டுக்கு நல்லதல்ல - பாகிஸ்தான் வேதனை!
பிசிசிஐ கிரிக்கெட்டுக்குள் அரசியலைக் கொண்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேதனை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பிப். 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகள் இடம்பிடித்துள்ளன.அதே போல் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன.
8 ஆண்டுகளுக்குப் பின் இம்முறை பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி தொடர் நடக்கவுள்ளது .இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுந்தது. மேலும் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது.இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடரின் தொடக்க விழாவிலும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ
இந்த நிலையில் பிசிசிஐ கிரிக்கெட்டுக்குள் அரசியலைக் கொண்டு வருவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேதனை தெரிவித்துள்ளது.இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறுகையில் .பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மறுத்துவிட்டனர். CT தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பவில்லை.
இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன.கிரிக்கெட்டுக்குள் அரசியலைக் கொண்டு வருகிறது பிசிசிஐ. இது விளையாட்டுக்கு நல்லதல்ல. ஐசிசி இதை நடக்க விடாது என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.