எல்லையில் தாக்குதல்; தர்மசாலா மைதானத்தில் நடந்தது என்ன - நிறுத்தப்படும் ஐபிஎல்?
பஹல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா பாகிஸ்தானை போர்மேகங்கள் சூழத் தொடங்கியிருக்கின்றன.
சிந்தூர் நடவடிக்கை
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்த பிறகு இரண்டு நாட்களாக இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். அதன் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தர்மசாலாவில் டெல்லி- பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நடந்தது. பஞ்சாப் அணி பேட் செய்து கொண்டிருந்த சூழலில் திடீரென மைதானத்தின் ஒரு பகுதியில் விளக்குகள் அணைந்தன. தொழில்நுட்பக் கோளாறால் விளக்குகள் அணைந்திருக்கலாம் என்ற கருதப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு கோபுரங்களில் இருந்த விளக்குகளும் அணைந்தன.
ஐபிஎல் நிறுத்தம்
உடனடியாக வீரர்கள் களத்தை விட்டு வெளியேறினர். ஐபிஎல் சேர்மன் அருண் துமால் ரசிகர்களை உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கோரினார்.
ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் அதிக மக்கள் கூடியிருந்த தரம்சாலா மைதானத்தில் இருந்து மக்களை வெளியேற்றியதாக தெரிய வந்திருக்கிறது.
உனாவிலிருந்து சிறப்பு ரயில் மூலம் வீரர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிற பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நிறுத்துவது குறித்தும் யோசித்து வருகிறது.