இந்திய அணி வீரர்கள் 6 பேருக்கு காயம்... தென்னாப்பிரிக்கா தொடருக்கு ஆளே இல்லாத பரிதாபம்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கவுள்ளது.
ஜுன் 9 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அணியை தேர்வு செய்வதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது தீபக் சஹார் (காலில் காயம்), ரவீந்திர ஜடேஜா (கையில் காயம்), சூர்யகுமார் யாதவ் - (கையில் காயம்), ஹர்ஷல் பட்டேல் (உள்ளங்கையில் காயம்), அஜிங்கியா ரகானே (தசைப்பிடிப்பு), பிரித்வி ஷா (டைப்பாய்ட் காய்ச்சல்) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் நிறைய அறிமுக வீரர்களை வைத்து தான் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.