இனி டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் - பிசிசிஐ அதிரடி முடிவு...!

Hardik Pandya Cricket Board of Control for Cricket in India
By Nandhini Nov 19, 2022 08:46 AM GMT
Report

இனி டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிக்கான போட்டி ரத்து

வெலிங்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கிரிக்கெட் போட்டியில் இரு அணிகள் நேருக்கு நேர் மோத இருந்தது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நேற்று மழை பெய்ததால், டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி நாளை நடைபெற உள்ளது.

bcci-hardik-pandya-new-captain

இனி ஹர்திக் பாண்டியா கேப்டன்

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி எதிரொலியாக தேர்வு குழு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால், சமூகவலைத்தளங்களில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கலைப்பட்டதையடுத்து, அதிரடியாக கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.