‘’பீப் சாப்பிட தடை’’ - இந்திய வீரர்களுக்கு ‛ஹலால்’ உத்தரவு போட்ட பிசிசிஐ

bcci indiancricketteam halalcompulsory
By Irumporai Nov 23, 2021 10:08 AM GMT
Report

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை அபாரமாக வென்றது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துகள்  தெரிவித்து வரும்  நிலையில் மற்றொருபுறம், பிசிசிஐ மீது கண்டனங்களை குவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

காரணம், பிசிசிஐ சார்பில் அணி வீரர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள உணவு முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான் என பிசிசிஐ சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை உண்ண கூடாது எனவும் ஹலால் முறையில் வெட்டப்பட்ட அசைவ உணவுகளை மட்டுமே இந்திய அணி வீரர்கள் சாப்பிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருப்பதற்கு நெட்டிசன்கள் கடும்  கண்டனங்களை  தெரிவித்துள்ளனர்.

இது இந்திய அணி வீரர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தவிர்த்து கட்டாயம் செய்வதாக  இணையவாசிகள் கூறி வருகின்றனர்.