கோலியின் கேப்டன் பதவியைப் பறித்தது கங்குலியா ? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவை சிலர் வரவேற்றாலும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக =பிசிசிஐ அமைப்பின் தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலியின் பங்கு மிக அதிகமாக இருகுகம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கோலியின் ரசிகர்கள், கங்குலியை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.
இதற்கு காரணம் பிசிசிஐ, கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், :
அனைத்து இந்திய சீனியர் தேர்வுக் குழு, ரோகித் சர்மாவை இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி 20 கேப்டனாக நியமனம் செய்வது என்று முடிவு செய்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து,விராட் கோலியிடம் இந்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டதா, அல்லது அவர் தரப்பு இந்த முடிவு குறித்து என்ன தெரிவித்தது என்பன குறித்து எந்த தகவலும் செய்திக் குறிப்பில் இடம் பெறவில்லை.
இதனால் கோலிக்கு இந்த முடிவில் திருப்தி இருந்திருக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கோலிக்கு சம்மதம் இல்லாமலேயே, பிசிசிஐ தன்னிச்சையாக இப்படியான முடிவை எடுத்திருக்கும் என்று சிசிஐ- யின் உள் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள், கோலியிடம் அமைப்பு எடுத்த முடிவு குறத்து சொல்லப்பட்டது என்றும், அவராகவே முன் வந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கோலி, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என்கிற முடிவில் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்வதில் அதிக விருப்பம் இருந்துள்ளது. இதனால் தான், பிசிசிஐ 'கெடு' கொடுத்த பின்னரும் தன் முடிவில் எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் இருந்துள்ளார் கோலி. இதுவே ரசிகர்களின் கொதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.