விரைவில் பிசிசிஐ எடுக்கபோகும் அதிரடி முடிவு ; தோனி ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

IPL 2022 msd thala dhoni chennai fans bcci decision
3 மாதங்கள் முன்

ஐ.பி.எல். 15-வது சீசன் வரும் மார்ச் இறுதியில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் போட்டியை எங்கு நடத்தலாம் என்று பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருகிறது.

தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் யு.ஏ.இ. போன்ற நாடுகள் ஐ.பி.எல். போட்டியை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், பி.சி.சி.ஐ.யோ , ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தையும் மும்பையில் உள்ள 3 கிரிக்கெட் மைதானங்களில் நடத்த முடிவு எடுத்துள்ளத.

இதன் மூலம் வீரர்கள் விமான நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிளான் பி-யாக ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் தான் எனது கடைசி ஐ.பி.எல். போட்டியை விளையாடுவேன் என்று தோனி பலமுறை கூறியுள்ளார்.

தற்போது பி.சி.சி.ஐ. போட்டிகளை மும்பையில் நடத்தினால் தோனியின் ஆசை நிறைவேறாமல் போய்விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சென்னை ரசிகர்களும் தோனியை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் தோனி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.