இந்திய வீரர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி - பிசிசிஐ அதிரடி முடிவு
கொரோனா தடுப்பூசியின் 2வது தவணையை செலுத்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை இந்த வாரத்துக்குள் செலுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தற்போது விடுமுறையில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு லண்டனில் 17 ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.