BCCI விருதுகள் 2024: வென்ற கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளின் முழு பட்டியல்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படும் பிசிசிஐயின் நமன் கிரிக்கெட் விருதுகள் நேற்று ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது.
BCCI விருதுகள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது 'நமன் கிரிக்கெட் விருதுகள்' என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கான விருதுகள் நேற்று ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது.
இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். பிசிசிஐயின் விருதுகள் வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு.
வாழ்நாள் சாதனையாளர் விருது : ஃபரூக் இன்ஜினியர், ரவி சாஷ்திரி
சிறந்த வீரருக்கான விருது : முகமது சமி (2019-20), ரவி அஸ்வின் (2020-21), ஜாஸ்பிரித் பும்ரா (2021-22), சுப்மன் கில் (2022-23)
சிறந்த வீராங்கனைக்கான விருது : தீப்தி ஷர்மா (2019-20) , ஸ்மிருதி மந்தனா (2020-22) மற்றும் தீப்தி ஷர்மா (2022-2023).
Presenting the winners of the Dilip Sardesai Award ?
— BCCI (@BCCI) January 23, 2024
?Most wickets in Test Cricket - 2022-23 (India vs West Indies) ? R Ashwin
?Most runs in Test Cricket - 2022-23 (India vs West Indies) ? Yashasvi Jaiswal#NamanAwards | @ashwinravi99 | @ybj_19 pic.twitter.com/cHTCRao7AU
சிறந்த அறிமுக வீரருக்கான விருது :
மயங்க் அகர்வால் (2019-20), அக்ஷர் படேல் (2020-21), ஸ்ரேயஷ் ஐயர் (2021-22), அமஞ்சோத் கௌர் (2022-23).
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (2022-23)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் : ரவி அஸ்வின் (2022-23)
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை: பூனம் ரௌட் (2019-20), மிதாலி ராஜ் (2020-21), ஹர்மன்பிரித் கௌர் (2021-22), ஜெமிமா ரோட்ரிகஸ் (2022-23)
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை : பூனம் யாதவ் (2019-20), ஜுலான் கோஸ்வாமி (2020-21), ராஜேஸ்வரி கெய்க்வாட் (2021-22), தேவிகா வித்யா (2022-23).