கம்பீர் பதவியில் கைவைக்கும் பிசிசிஐ - என்ட்ரி கொடுக்கும் ஜாம்பவான்
புதிய பயிற்சியாளரை நியமிக்கலாமா என்று பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய பயிற்சியாளர்
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இழந்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்தது.

இதனால் கவுதம் கம்பீரை டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளது.
பிசிசிஐ ஆலோசனை
ஆனால் 2027 உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வரலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றால், கம்பீரின் முடிவு பிசிசிஐ நிர்வாகிகள் கைகளில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.