இளம் வீரரை உடனடியாக இங்கிலாந்திற்கு அழைக்கும் இந்திய அணி
இங்கிலாந்து தொடரில் இருந்து சுப்மன் கில் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷாவிற்கு இந்திய அணி அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் சுப்மன் கில் விளக்கியுள்ளதால் அவருக்கு பதில் யாரை அணியில் சேர்ப்பது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சுப்மன் கில்லிற்கு பதிலாக மாயன்க் அகர்வாலை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என ஒரு சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தாலும், பெரும்பாலான முன்னாள் வீரர்கள் ப்ரித்வி ஷாவையே துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியமும் அந்த முடிவில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.