ஐபிஎல் 2022 திருவிழா : அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

ipl2022 iplt20schedule cskvsmi2022
By Swetha Subash Mar 06, 2022 01:39 PM GMT
Report

ஐபிஎல் 2022-ம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது.

மொத்தம் 70 போட்டிகளுடன் 65 நாட்கள் நீடிக்கவுள்ள இந்த போட்டிகள் 7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் 2 போட்டிகள் என 10 முறை நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணிகளில் குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஐபிஎல் 2022 திருவிழா : அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ | Bcci Announces Ipl T20 Series Schedule

குருப் பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதுகிறது.

மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 திருவிழா : அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ | Bcci Announces Ipl T20 Series Schedule

ஐபிஎல் அட்டவணையில் வரும் 26ஆம் தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வான்கடேவில் 20 போட்டிகளும், பிராபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகளும், டி.ஓய். பாட்டில் மைதானத்தில் 20 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே, மும்பை அணிகள் வான்கடே மைதானத்தில் மோதுகின்றன என்பது குரிப்பிடத்தக்கது.