இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - முக்கிய வீரருக்கு வாய்ப்பு
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா பங்கேற்கவுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமன் விஹாரி, புஜாரா, ரிஷப் பண்ட், கே.எஸ் பாரத், ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ராஹ், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.