உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற இளம் இந்திய படை - பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ

world cup match bcci announces u19 india won cash prize 40 lakhs
By Swetha Subash Feb 06, 2022 12:02 PM GMT
Report

சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற இளம் இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான 14-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.

இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸின் ஆண்டிகுவாவில் மோதிய இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து 44.5 ஓவரில் வெறும் 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியிருக்கிறது என்ற சாதனையை படைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பலரும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இளம் இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கு தலா 40 லட்சமும், மற்ற நிர்வாகிகளுக்கு தலா 25 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ-யின் செயலாளரான ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.