ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ சிறப்பு பரிசு அறிவிப்பு

bcci pv sindhu tokyoolympics2020 meerabai sanu neeraj chopra
By Petchi Avudaiappan Aug 08, 2021 01:18 AM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்தார். அவரது வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ சிறப்பு பரிசு அறிவிப்பு | Bcci Announce Cashaward For Olympics Medal Winners

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.அதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பி.சி.சி.ஐ. ரூ.1 கோடியும், வெள்ளி வென்ற மீராபாய் சானு மற்றும் ரவிகுமார் தஹியாவுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, லோவ்லினா, பிவி சிந்து ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேபோல் ஒலிம்பிக்கில் 41 ஆண்டுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு 1.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு்ள்ளது.