U19 உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை! எத்தனை கோடி தெரியுமா?
2026 U19 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி சதம்
ஹராரேயில் நடந்த U19 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.

முதலில் ஆடிய இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் (175) மூலம் 411 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 311 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இந்தியா 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று U19 உலகக்கிண்ண மகுடத்தை சூடியது. இது இந்திய அணி கைப்பற்றிய 6வது உலகக்கிண்ணம் ஆகும்.
பிசிசிஐ பரிசு
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, உலகக்கிண்ண சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி ரூ.7.50 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
