பிபிஇ உடை அணிந்து எஸ்.ஐ. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்!
கன்னியாகுமரி அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதியைச் சேர்ந்த செலின்குமார், களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்து செலின்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர்.
இதில் செலின்குமார் வீட்டில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.