பிபிசி சேனலுக்கு தடை விதித்த சீனா: கொதித்தெழுந்த இங்கிலாந்து

world england channel
By Jon Feb 14, 2021 04:00 AM GMT
Report

சீனாவில் பிபிசி சேனலுக்கு தடை விதித்ததுக்கு இங்கிலாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சினை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப் இது பற்றி கூறுகையில், “ சீனாவின் நடவடிக்கை கருத்து ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது” எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்காவும் சீனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.