பிபிசிக்கு எதிராக அமலாக்கதுறை வழக்குபதிவு : காரணம் என்ன?
இந்தியாவில் முதலீடு செய்ய முறையாக அனுமதி பெறவில்லை என பிபிசிக்கு எதிராக அமலாக்கதுறை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மோடி ஆவணப்படம்
குஜராத் கலவரத்தில் மோடியின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது, இதற்கு மத்திய அரசும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை வழக்குபதிவு
அதே சமயம் சமீபத்தில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் இயங்க முறையாக அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது.
ஒரு வேளை அமலாக்கதுறையின் வழக்கானது நீதிமன்றத்தில் நீருபிக்கப்பட்டால் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது