ஏன் பிபிசி ஆவணப்படத்திற்கு தடை போட்டீர்கள்? - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்திற்கு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிபிசி ஆவணப்பட விவகாரம்
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் அம்மாநிலமே பற்றி எரிந்தது.
இந்த கலவரத்தில் நுாற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாடு முழுக்க இந்த கவவர சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
இதில் சர்ச்சைக்குரிய மற்றும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால் இந்த ஆவணப்படம் தொடர்பான லிங்குகளும், ட்விட்டர் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன. இதே போன்று யூடியூப்பில் இருந்து ஆவணப்படம் நீக்கப்பட்டது.
மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
[LC75V7BBC documentary
அப்போது இது தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை வருகிற ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்து என் ராம், மஹுவா மொய்த்ரா, பிரசாந்த் பூஷன் மற்றும் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகியோரின் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.