பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தான் - வெளியான புது தகவல்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக கடந்த சில வாரங்களாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்குகள், போட்டியாளர்கள் இடையேயான உரையாடல் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனை இந்த வாரம் சிம்பு விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற போவது யார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.அதன்படி இந்த வாரத்தில் அனிதா மற்றும் ஸ்ருதி ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அனிதா கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி ரசிகர்களிடையே வெறுப்பை பெற்றதால் அவர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வாரம் சிம்பு டபுள் எவிக்ஷன் நடந்தால் கண்டிப்பாக அனிதா மற்றும் ஸ்ருதி தான் வெளியேறுவார்கள்.
இதனிடையே இப்போட்டியில் இந்த இருவரை தவிர்த்து சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை செல்வி, ரம்யா பாண்டியன், ஜூலி, அபிராமி, நிரூப், பாலா, சதீஷ் ஆகியோர் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.