மஹாலக்ஷ்மியா..? மூதேவியா..? - நடிகை மஹாலக்ஷ்மியை தாறுமாறாக விமர்சித்த பயில்வான்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான மஹாலக்ஷ்மியை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் பயில்வான்.
பயில்வான் பேட்டி
திடக்கழிவுகளை திட்டத்தில் போலியான ஆவணங்களை காண்பித்து ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், தயாரிப்பாளர் ரவீந்தர், பிறவியிலேயே பணக்காரர் என குறிப்பிட்டு திடக்கழிவுகளில் அதில் பல கோடி ரூபாய் தில்லுமுல்லு நிலையில் தற்போது கைதாகி புழல் சிறையில் அடைத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என கூறினார்.
மஹாலக்ஷ்மியா..? மூதேவியா..?
ஏற்கனவே திருமணமான ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட மஹாலக்ஷ்மி, அந்த விஷயம் காவல் நிலையம் வரை சென்றது என குறிப்பிட்டு, திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், ரவிந்தர் சந்திரசேகரை திடீரென திருமணம் செய்து கொண்டார்மஹாலக்ஷ்மி என குறிப்பிட்டு, ரவீந்தர் தயாரிப்பில் படம் நடித்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
திருமணமானவுடன் ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என பேச ஆரம்பித்து விட்டார்கள் என விமர்சித்த பயில்வான், யூடியூப்பில் பலரை விமர்சித்த ரவீந்தர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுகிறார் " என கூறினார்.