அந்த காமெடியனுக்கு டிமாண்ட்.. பல நடிகைகளுடன் தொடர்பு.. ஏன் தூக்குனனு திட்டினார் - பிரபலம்!
பயில்வான் ரங்கநாதன் நகைச்சுவை நடிகர் ஒருவரை குறித்த தகவல் ஒன்றை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காமெடியன்
தனது நகைச்சுவை திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்று இன்று வரை மக்களின் மனதில் அழியாத காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் கவுண்டமணி. தற்போது, மூத்த பத்திரிக்கையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன்,
கவுண்டமணி பாடி டிமாண்ட் அதிகம் என்று பேசி இருக்கிறார். அண்மையில் அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், அதிகமான கிசுகிசுக்களிலும் கவுண்டமணி அவர்கள் சிக்கிருக்கிறார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகளுடன் அவர் உறவில் இருந்தார்.
பல நடிகர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும். ஆனால் அதை அவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் கவுண்டமணி பாடி டிமாண்ட் விஷயத்தில் வெளிப்படையாகவே இருந்தார். அவருடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் தொடர்பில் இருந்தார்.
நடிகைகளே விரும்பி சென்றதால், இதில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்பட்டதில்லை. மேலும், மது, சிகரெட் என அனைத்து பழக்கமும் கவுண்டமணி அவர்களுக்கு உண்டு. ஆனால், நான் கவுண்டமணியால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் ஆவாரம்பூ படத்தில்,
பிரபலம்
நான் ஷர்மிளாவின் கணவராக நடித்து இருந்தேன். அப்போது, ஒரு காட்சியில் நான் ஷர்மிளாவை தூக்குவது போல காட்சி இருந்தது. படப்பிடிப்பு நடக்கும்போது நேரம் ஆகிவிட்டதால் கவுண்டமணி கிளம்பிவிட்டதால், அந்த காட்சியை அவர் பார்க்கவில்லை.
ஆனால் படத்தின் டப்பிங்கின் போது அந்த காட்சியை அவர் பார்த்து விட்டு என்னை கண்டபடி திட்டினார். ஏனென்றால் ஷர்மிளாவிற்கும் அவருக்கும் அப்போது ஒரு உறவு இருந்தது. நீ எப்படி தூக்குவ, என்று கேட்டார். நான் இயக்குனர் கூறியதால் நடித்தேன் என்று சொன்னபோதும்,
அவர் சொன்னா நடிப்பியா? என்று கண்டபடி என்னை திட்டி விட்டு, நானே இதுவரைக்கும் அப்படி தூக்கியது இல்லை என்று சிரித்துவிட்டு சென்றுவிட்டார். அத்தோடு அவர் அந்த விஷயத்தை மறந்து இருப்பார் என்று நினைத்தேன்.
ஆனால், அவர் அதை மறக்கவே இல்லை. அந்த படத்திற்கு பிறகு கவுண்டமணி அவர்கள் எந்த படத்திற்கும் என்னை அழைக்கவே இல்லை. அதன் பிறகு நான் அவருடன் சேர்ந்து நடிக்கவே இல்லை.
அதுதான் அவருடன் நான் நடித்த கடைசி படம். இதுபோல எம்ஜிஆருடனும் ஒரு பிரச்சனை வந்தது. ஆனால், எம்ஜிஆர் அதை மறந்துவிட்டார். கவுண்டமணி அதை மறக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.