ஆன்லைனில் ஓட்டு - ஜோதிகா போதையில் உளறினாரா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்
நடிகை ஜோதிகா ஆன்லைன் வழியாக வாக்கு செலுத்தியாக கூறியது பெரும் விமர்சனங்களை பெற்றது.
ஜோதிகா சர்ச்சை
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், நடிகர்கள் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் மட்டுமே வந்து வாக்களித்தார். அவர்களுடன் நடிகை ஜோதிகா வரவில்லை. ஜோதிகா வாக்களிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், அது குறித்து அவர் பட ப்ரோமோஷன் ஒன்றில் பேசினார்.
செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஓட்டுப் போடுவதாக குறிப்பிட்ட ஜோதிகா, இம்முறை தனிப்பட்ட காரணங்களால் வர முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், சில நேரங்களில் நாம் ஊருக்கு சென்று விடாமல், சில நேரங்களில் உடல்நலக் குறைவு காரணமாக இது நடக்கலாம் என்ற ஜோதிகா, இது தனிப்பட்ட விஷயம் என சுட்டிக்காட்டி, நாம் தனிப்பட்ட முறையில் ஆன்லைனில் கூட ஓட்டுப் போடலாம் எனக் கூறினார்.
தொடர்ந்து அனைத்தையுமே பொது வெளியில் கூற வேண்டியதில்லை எட்ன்றும் தெரிவித்து தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
போதையில் உளறினாரா
ஜோதிகா இப்படி பேசியது சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றது. இது குறித்து பயில்வான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பேட்டியில் அவர் பேசும் போது, போதையில் உளறினாரா ஜோதிகா என்று ஆரம்பித்து, பட ப்ரோமோஷனுக்காக சென்னை வந்து பேட்டியளித்த விட்டு பின்னர் மும்பைக்கே ஜோதிகா சென்று விட்டார்.
ஜோதிகாவிற்கு சென்னை என்றால் வேப்பங்காய் போல் கசக்கிறது. மாமனார், மாமியார் முகத்தில் முழிக்க கூடாது என்று மும்பைக்கே சென்றுவிட்டார்.
ஏன் ஓட்டு போட வரவில்லை என்று கேட்டதற்கு, முக்கிய காரணங்களால் வரமுடியவில்லை, ஆன்லைனில் ஓட்டுபோட வசதி இருக்கு என்று சொன்னார் ஜோதிகா. தேர்தலில் ஆன்லைனில் எப்படி ஓட்டுப்போடலாம்னு யார் சொன்னா. இவ்வாறு பயில்வான் அந்த பேட்டியில் ஜோதிகா குறித்து பேசியுள்ளார்.