யார் மிரட்டினாலும் இப்படிதான் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி
என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர் , நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் 401 வது நாளான இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை அவரசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காயம் பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார்.
இதில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் :
நடிகை நயன்தாரா,விக்னேஷ்சிவன் திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓ.டி.டியில் விற்பனை. செய்து ஆடம்பர கல்யாணமாக யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது.
எதிர்ப்பு வந்தாலும் பேசுவேன்
என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து அதனை நடத்தியது கிடையாது , எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன். நடிகர், நடிகைகளை பற்றி நான் கூறுவதை கேட்க 3 லட்சம் பேர் இருக்கின்றனர். தொடர்ந்து பேசுங்கள் எனவும் பொதுமக்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் கூறுவதாக சொன்ன பயில்வான் ரங்கநாதன் .
நடிகர்கள் தலைவர் ஆவதை ஏற்க முடியாது
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரை தவிர யாரும் யோக்கியர் அல்ல. தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர் , நடிகைகளும் சம்பாதித்ததை பயன்படுத்தி பள்ளி, மருத்துவமனை, மஹால் தான் கட்டுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்வதில்லை.
அதனால் நடிகர்கள் தலைவர் ஆவதை ஏற்க இயலாது என்றார். நான் யாரைபற்றியும் ஆபாசமாக பேசவில்லை எனவும், சட்டத்திற்கு உட்பட்டே பேசுவதாகவும் தெரிவித்தார்.