ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து ஆபாச பேச்சு - வருத்தம் தெரிவித்த பிரபல நடிகர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து ஆபாசமாக பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இந்நிகழ்வு திரைத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஐஸ்வர்யா தனுஷ் பிரிவுக்கான காரணம் என பேசி பல வீடியோக்களை வெளியிட்டார்.
அதில் ஐஸ்வர்யாவுக்கு தனது மாமா மகனான இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணத்திற்கு முன்பே தவறான உறவு இருந்ததாக கூறினார். மேலும் திருமணத்திற்கு பிறகும் கூட இருவரும் தங்களின் தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளனர் என்றும், தனுஷ் பல முறை எச்சரித்தும் இருவரும் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறினார்.
ஐஸ்வர்யா-அனிருத் இடையேயான தவறான உறவால் தனுஷ் அனிருத்திடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்றும் தனது வீடியோவில் கூறியிருந்தார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் திருமணம் நடைபெறும் போது அனிருத்துக்கு 14 வயதுதான் என்றும் திருமணத்தில் அவர் சிறு பையனாக இருந்த போட்டோவையும் ஷேர் செய்து விளாசினர்.
இதனை தொடர்ந்து அனிருத் தரப்பிலும் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்த பயில்வான் ரங்கநாதன், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.