Saturday, Jun 28, 2025

நீ நிர்வாணமா நடப்பியா? தயாரிப்பாளர் ராஜனுக்கு பயில்வான் ரங்கநாதன் சவால்..!

Tamil nadu
By Thahir 3 years ago
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ராஜன் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகைகளை மிரட்டி பணம் பறிப்பதாக கூறி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பயில்வான் ரங்கநாதன் எந்த சினிமா நடிகர்களிடமோ,நடிகர்களிடமோ,தயாரிப்பாளர்களிடமோ 10 பைசா கூட வாங்கவில்லை என்றார்.

என் தொழில் மேல் சத்தியமாக எவனையும் நான் ப்ளாக் மெயில் செய்தது இல்லை. இப்போ சவால் விடுகிறேன் நான் யாரையும் ப்ளாக் மெயில் செய்து பணம் வாங்கியிருந்தால் இந்த தொழிலை விட்டு போய்விடுவதாக தெரிவித்த அவர்,நீ நிர்வாணமா நடப்பியா? என சவால் விடுத்தார்.

நான் இது வரை கூறி வரும் அனைத்து விஷயங்களும் உண்மை.நான் பொய்யாக சொல்லியிருந்தால் எனக்கு யூடியூப்பில் மில்லியன் பளோயர்கள் இருப்பார்களா? உண்மையை தவிர வேற எதையும் பேசமாட்டேன்,வதந்தியை பேச மாட்டேன்,பொய்யும் பேசமாட்டேன்.

தான் சினிமாவில் சம்மாதித்தை காட்டிலும் யூடியூப்பில் அதிகம் சம்பாதிப்பதாக தெரிவித்தார். செய்தியாளர்கள் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை பற்றி பேசலாமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்,அது என் உரிமை என்று கூறினார். மேலும் அவர் பெண்கள் காலை விரித்து வைத்துக்கொள்ளாமல் இருந்தால் பலாத்காரம் நடக்காது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.