Saturday, Jun 21, 2025

80 வயசு கிழவன் ரஜினி - ஜெயிலர் ட்ரைலர் - தாறுமாறாக விமர்சித்த பயில்வான்

Rajinikanth Bayilvan Ranganathan Jailer
By Karthick 2 years ago
Report

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரைலரை பார்த்து ரஜினி 80 வயது கிழவன் போல இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ரஜினி ஜெயிலர்

80 வயசு கிழவன் ரஜினி - ஜெயிலர் ட்ரைலர் - தாறுமாறாக விமர்சித்த பயில்வான் | Bayilvan Mocks Rajini Look In Jailer

அண்ணாதே படத்திற்கு பிறகு ரஜினியின் நடிப்பில் தற்போது மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஜெயிலர்". நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் இம்மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ட்ரைலர் வெளியீடு வெளியீட்டிற்கு சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்களின் நல்ல வரவேற்பை இந்த ட்ரைலர் பெற்றதை தாண்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த ட்ரைலர் அதிகரிக்க வைத்துள்ளது.

80 வயசு கிழவன் ரஜினி - ஜெயிலர் ட்ரைலர் - தாறுமாறாக விமர்சித்த பயில்வான் | Bayilvan Mocks Rajini Look In Jailer

விமர்சித்த பயில்வான்

ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த ட்ரைலரை தற்போது பயில்வான் ரங்கநாதன் எதிர்மறையாக கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரைலரில் ரஜினி பார்க்க 80 வயது கிழவன் போல உள்ளதாக என விமர்சித்த பயில்வான், மேக்கப்பில் படக்குழு கோட்டை விட்டது என சாடினார்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் எந்த வித மாஸ் Build-up இல்லாமல் ஏமாற்றமாகவே இந்த ட்ரைலர் அமைந்துள்ளது என குறிப்பிட்டு, சிவராஜ்குமார், மோகன் லால் என பல நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களை டிரைலரில் காட்டவே இல்லையே என்றும் அவர் குறைகூறினார்.

80 வயசு கிழவன் ரஜினி - ஜெயிலர் ட்ரைலர் - தாறுமாறாக விமர்சித்த பயில்வான் | Bayilvan Mocks Rajini Look In Jailer

இருப்பினும் இது நெல்சனின் புத்திசாலி தானம் தான் என பாராட்டி, எனினும் படத்தின் ட்ரைலருக்கு தான் 100'க்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே வழங்குவதாக குறிப்பிட்டார்.