சமந்தாக்கு உங்களால தான் "அப்படி" ஆச்சு...விஜய் தேவரகொண்டாவை வம்பிழுத்த பயில்வான்

Samantha Vijay Deverakonda Bayilvan Ranganathan
By Karthick Aug 25, 2023 02:30 PM GMT
Report

குஷி பட ப்ரோமோஷனுக்காக வந்த நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிகர் பயில்வான் வாக்குவாதம் செய்த காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

விஜய் தேவர்கொண்டா

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் விஜய் தேவர்கொண்டா அடுத்தடுத்த நடித்த படங்கள் அந்தளவிற்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான "லைகர்" படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. 

bayilvan-fights-with-vijay-devarakonda-

இந்நிலையில், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தற்போது வெளிவரவிற்கும் படம் குஷி. சமந்தா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். படத்தை பிரபலப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா பங்கேற்று வருகின்றார்.  

வம்பிழுத்த பயில்வான் 

இந்நிலையில், தான் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்ட போது, அவரிடம் விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவின் உடல்நிலை குறித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

சமந்தா இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டாரா? இல்லை படத்தில் நடிக்கும் போது தான் அவருக்கு இவ்வாறு நடந்ததா? என பயில்வான் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் தேவர் கொண்டா, சமந்தா இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே 60% படப்பிடிப்பை நடத்திவிட்டோம் என்றும் பின் தான் சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை எடுத்து குணமடைந்த மீதியிருந்த படப்பிடிப்பை நடத்தினோம் என கூறினார்.

bayilvan-fights-with-vijay-devarakonda-

அதற்கு பின் விஜய் தேவர் கொண்டாவை வம்பிழுக்க பயில்வான் ரங்கநாதன், சமந்தாவிற்கு இந்த நோய் வருவதற்கு காரணமே நீங்கதானா? என்று கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்த மற்றவர்கள் சிரித்த நிலையில் ஏன் என விஜய் தேவர்க்கொண்டாவுக்கு புரியவில்லை. அதற்குள் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது.