அந்த பயம் இருக்கு..!! அதனால தான் இன்னும் நித்யா மேனன் கல்யாணம் பண்ணிகலயா??

Nithya Menen Bayilvan Ranganathan
By Karthick Oct 16, 2023 04:53 PM GMT
Report

நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றார்.

நித்யா மேனன்

அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ளவர் நடிகை நித்யா மேனன். தமிழில் விஜயுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

bayilvan-about-nithya-menon-marriage-issues

தற்போது நித்யா மேனன் நடிப்பில், குமாரி ஸ்ரீமதி என்ற ட்ராமா தொடர் கடந்த 28-ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 35 வயதை கடந்தும் நடிகை நித்யா மேனன் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பயில்வான் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பயம் இருக்கு

அந்த பேட்டியில் பயில்வான், நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டு, கேரளாவில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகைகள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்திருக்கிறார்கள் - அந்தக் கொடுமை தனக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றார்.

bayilvan-about-nithya-menon-marriage-issues

அடுத்த காரணமாக அவர், அவருடைய உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அவருக்கு திருமணம் தடைப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றார்.