சினேகா - பிரசன்னா உறவில் விரிசல் உண்மைதான்; காரணமும் இதுதான் - போட்டுடைத்த பிரபலம்
சினேகா - பிரசன்னா உறவு விரிசல் குறித்து பயில்வான் தகவல் பகிர்ந்துள்ளார்.
சினேகா - பிரசன்னா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர். தற்போது சினேகா ரியாலிட்டி ஷோவில் நடுவராக உள்ளார். மேலும், ஆடை பிஸினஸை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கிடையில் சினேகா தனது கணவர் பிரசன்னாவை விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவியது.
உறவு விரிசல்?
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், அண்மையில் சினேகா அளித்த பேட்டியில் எங்கள் குடும்பத்தில் விரிசல் வந்தது உண்மைதான் என கூறியிருந்தார்.
திருமணத்திற்கு பிறகு வாடகைக்கு வீடு தேடினோம். பல வீடுகளை பார்த்தோம், நடிகர் என்பதால் பலர் வீடு தர தயங்கினார்கள். இதனால், சில நாட்கள் நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். அதன் பிறகு ஒரு வீட்டில் குடியேறினோம். எங்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து இருக்கிறது.
சில நேரம் அது அடிதடியாக மாறி குடும்பத்தில் விரிசல் பெரிதாகிவிடும். அப்படி எங்களுக்குள் சண்டை வரும் போதேல்லாம், நானும் பிரசன்னாவும் டேட்டிங் செல்வோம். அப்படி நாங்கள் செல்லும் போது எங்களுக்குள் இருக்கும் சண்டையை மறந்துவிடுவோம்.
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால், தயவு செய்து டேட்டிங் செல்லுங்கள், அப்படி இல்லை என்றால் படுக்கை அறைக்குள் செல்லுங்கள் இது பல பிரச்சனைகளை தீர்க்கும். இந்த விஷயத்தை சொன்ன சினேகாவை பாராட்டித்தான் ஆகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்