பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி

Election Mamata Banerjee wins Bhowanipore
By Anupriyamkumaresan Oct 03, 2021 10:06 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

இருப்பினும், அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.

பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி | Bavanipur Local Election Mamtha Banerjee Wins

அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்.

இந்த நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கரஸ் சார்பாக போட்டியிட்ட மம்தா பானர்ஜியே வெற்றியை தழுவினார்.