மக்கள் செல்வாக்கும் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பும் : விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா?

people property value Vijaya Baskar
By Jon Mar 18, 2021 01:56 PM GMT
Report

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிகவும் பரிட்சயமானவர் அமைச்சர் விஜயபாஸ்கர். விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். உள்ளூரில் நடைபயிற்சி, சைக்கிள் பயணம், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடி உதவி என பலரை கவர்ந்துள்ள விஜயபாஸ்கர். அத்தொகுதி மக்களுடன் இணக்கமாக உள்ளார்.

அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் நேரம் காலம் பார்க்காமல் பம்பரமாக சுழன்ற விஜயபாஸ்கரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு தாக்கலில் சொத்து மதிப்பு, குற்ற பின்னணி ஆகியவற்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.60 கோடியே 30 லட்சமாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கலின் போது இவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.6.24 கோடி.