Tuesday, Apr 8, 2025

பசில் ராஜபக்சே ராஜினாமா செய்கிறாரா : வெளியான பரபரப்பு தகவல் ?

Basil Rajapaksa
By Irumporai 3 years ago
Report

இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ந ராஜினாமா செய்ய உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பசில் ராஜபக்சே நாளை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அந்நாட்டு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 11 மணிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

ராஜினாமா செய்த பின்னர் கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றவுள்ளதாக கூறப்படுகிறது.