முதல்வர் நிவாரண நிதிக்கு பாஷ்யம் கட்டுமான நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொது மக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வரத் தொடங்கின. பல பிரபலங்களும் தனியார் நிறுவனங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கின.
அந்த வரிசையில் பாஷ்யம் கட்டுமான நிறுவனம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு.அபினேஷ் யுவராஜ் மற்றும் திரு.பாஷ்யம் யுவராஜ் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து அதற்கான காசோலையை வழங்கினர்.