உதயநிதி ஸ்டாலின் இல்லை..உதயநிதி ஹிட்லர்...பசவராஜ் பொம்மை விமர்சனம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சுக்கள் விவாத பொருளாக இருக்கும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி கருத்து
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
தேசிய அரசியலில் இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் இதற்கு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஹிட்லர்
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் அம்மாநில பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என கூறும் உதயநிதி ஸ்டாலினை "உதயநிதி ஹிட்லர்" என விமர்சனம் செய்துள்ளார். இனிமேல் அவருக்கு அப்பெயரே பொருத்தமாக இருக்கும் ஏன் குறிப்பிட்ட பசவராஜ் பொம்மை, நாட்டின் சமூக கட்டமைப்பை பணயம் வைத்து ஆட்சிக்கு வர நினைக்கும் கட்சிகளின் மனநிலை இது என தெரிவித்துள்ளார்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
