தமிழ்நாடு முழுவதும் பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

tasmac madrashc
By Irumporai Apr 05, 2022 12:15 PM GMT
Report

மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேதான் அருந்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி டாஸ்மாக் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இது இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் அருகே பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டுவர தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வலக்கை ஏப்.26க்க சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.