பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்து வரும் எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்
பிரபல விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்று வரும் நிலையில் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் நடைபெறும் ட்விஸ்ட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாரதியும் ஹேமாவும் பீச் போக அங்கே வந்த கண்ணம்மாவை ஹேமா பார்த்துவிடுகிறார். பின் கண்ணம்மாவை ஷாப்பிங் செய்ய ஹேமா அழைக்க மூவரும் சேர்ந்து நீண்ட நேரம் சந்தோசமாக இருக்கின்றனர்.
அப்போது லட்சுமி இருந்தால் நன்றாக இருக்கும் என ஹேமா பேசுகிறார். அதன் பின் அஞ்சலிக்கு குழந்தை பிறக்கும் எனவும் அப்போது கண்ணம்மா அழைத்து சென்ற சித்த மருத்துவர் தந்த மருந்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கிறது.
ஆனால் உண்மை தெரிந்தால் பிரச்சனை வரும் என வெண்பா அஞ்சலியை கொல்ல திட்டமிடுகிறார். பின் அஞ்சலி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க பாரதி தந்த மருந்தால் தான் இப்படி ஆனது என அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் கண்ணம்மா பாரதிக்கு ஆதரவாக இது அவர் கையெழுத்து இல்லை என சொல்ல அனைவரும் என்ன நடந்தது என தெரியாமல் இருக்கின்றனர். ஆனால் அகில் தான் இந்த பிரச்சனையை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்.
You May Like This