அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று..!

BarackObama AmericaFormerPresident BarackObamaCovid CovidTestsPositive
By Thahir Mar 13, 2022 10:34 PM GMT
Report

அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று படாய் படுத்தி வருகிறது.கொரோனா பெருந்தொற்றால் பல உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கவிட்டது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.63 கோடியாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களா தனக்கு தொண்டை வலி இருந்து வந்ததாகவும்,இருந்தாலும் நன்றாக உள்ளேன். நானும் எனது மனைவி மிச்செலி இருவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம்.

என் மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை,கொரோனா தொற்று குறைந்தாலும் கூட நீங்கள் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 

You May Like This