பிரபல இசையமைப்பாளர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய இசையமைப்பாளர்களில் செல்வாக்கு மிக்கவர் பப்பி லஹிரி.
1980 மற்றும் 1990களில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். டிஸ்கோ டான்சர்,டான்ஸ் டான்ஸ் மற்றும் நமக் ஹலால் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
69 வயதான பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே உடல் சீரடைந்த நிலையில் அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நிலை மோமடைந்தது.
இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2014-ல் பிஜேபியில் சேர்ந்த அவர் மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது