தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கூடுதல் பொறுப்பு : குடியரசு தலைவர் அறிவிப்பு
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் தமிழகத்திற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்,
#BanwarilalPurohit is new #Punjab Governor https://t.co/JQHehDoJPn
— The Tribune (@thetribunechd) August 27, 2021
அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் பன்வாரிலால் புரோகித் இனி தமிழகத்திற்கு மட்டுமின்றி பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பொறுப்பேற்க உள்ளார்.