இந்தியாவில் இயங்கி வந்த 63 ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி தடை...!

Government Of India
By Nandhini 2 மாதங்கள் முன்

இந்தியாவில் இயங்கி வரும் 63 ஆபாச இணைய தளங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்திருக்கிறது.

63 ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 63 ஆபாச இணையதளங்களுக்கான இணைப்புக்களை தடை செய்யுமாறு, இணையதள சேவை வழங்குவோருக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், இந்த ஆபாச தளங்களை தடை செய்தவுடன் மொபைல் போன், லேப்டாப், டெஸ்க்டாப் உள்ளிட்ட அனைத்து வகையான தளங்களிலிருந்தும் ஆபாசப்படங்கள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

bans 63 porn websites