கொடி, பதாகைகள் வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்!

tamilnadu banner mkstalin
By Irumporai May 19, 2021 02:18 PM GMT
Report

கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணி ஆய்வுக்காக சேலம், திருப்பூர் வரும் தனக்கு, பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக  நாளை (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் திமுக நிர்வாகிகளைச் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.

எனவே,  எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் கழகக் கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.